பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கத்துடன் ஜேர்மனியில் அநுரவை துரத்தவுள்ள போர்க் கால பொறுப்புக் கூறல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும், போர்க்கால பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவரது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜே ர்மனி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கேட்கும் என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி, பிற மேற்கத்திய சக்திகளுடன் சேர்ந்து, நீண்ட காலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிறது.
ஜனாதிபதி ஜூன் 11 ஆம் திகதி ஜேர்மனிக்குச் செல்லவுள்ளார். நாட்டின் தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொலும் நான்காவது அதிகாரப்பூர்வ விஜயமாக இது இருக்கும்.
முன்னதாக, அவர் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.
தனது ஜேர்மன் பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சர் பொரிஸ் பிஸ்டோரியஸ், பாதுகாப்பு அமைச்சர் கத்தரினா ரீச் ஆகியோருடனும் ஜனாதிபதி அனுர குமார பேச்சுவார்த்தை நடத்துவார்.
இருப்பினும், ஜேர்மன் அரசின் பிற அமைச்சரவை அமைச்சர்களுடனான சந்திப்புகள் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியானது முதலீடுகள் மற்றும் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான சந்தையாகவும் இருப்பதுடன் திறமையான பணியாளர்களுக்கான வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி போன்ற துறைகளிலும் மற்ற அமைச்சரவை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த விஜயம் கதவைத் திறக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி ஜனாதிபதி அனுர குமார ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸை சந்திக்க மாட்டார் எனவும் அதற்கு பதிலாக, ஜேர்மனியின் கூட்டாட்சித் தலைவர் பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
![]()