இந்தியா

பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் இல்லை

பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் வழங்கப்படாது என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்துள்ளது.

இந்நிலையில், அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் இந்திய மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மீண்டும் தொடராத வகையிலும் தனது ஆதரவை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்.

நமது பிரதமர் கூறியது போல ‘தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது’

காஷ்மீர் தொடர்பான எந்த இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடப்பதானால், அது சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவது தொடர்பாக மட்டுமே பேசப்படும் என்றும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *