உலகம்

‘கோல்டன் டோம்’ திட்டத்தை அறிவித்த ட்ரம்ப்

நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 175 பில்லியன் டொலர் மதிப்பிலான ‘கோல்டன் டோம்’ என்ற திட்டத்தை அறிவித்தார்.

இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும் என்றும், 2029 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவிக்காலம் முடியும்போது அவை முழுமையாக செயல்படும் என்றும் கூறினார்.

இந்த கோல்டன் டோம் திட்டம் இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை இன்ஸபிரேஷனாக கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குவதை எதிர்த்து ஈரான், ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர் தாக்குதல்கள் நடக்கின்றன. அங்கிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்புகள் கொண்ட அமைப்பு ‘அயன் டோம்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *