இலங்கை

மிகவும் நூதனமான முறையில் போதைப் பொருள் கடத்தி வந்த மூன்று பெண்கள் விமான நிலையத்தில் கைது

சுமார் 120 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் ரக போதைப் பொருளை மின்சார உபகரணங்களில் மறைத்து வைத்து கொண்டுவந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவ்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

56, 46 மற்றும் 18 வயதுடைய மூன்றுப் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்த 12 கிலோகிராம் போதைப்பொருள் கையிருப்பை தாய்லாந்தில் இருந்து வாங்கி, இந்தியாவின் சென்னைக்கு வருவதற்கு முன்பு ஏழு ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்சார சமையல் சாதனங்களுக்குள் கவனமாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அங்கிருந்து நேற்று (19) மாலை 6.30 மணிக்கு இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பை கண்காணித்தபோது, ​​இந்த மூன்று பெண்களும் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இது போன்ற மின் சாதனங்களை கொண்டு வந்திருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் மூன்று சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *