உலகம்

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 32 பலஸ்தீனியர்கள் பலி

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று அதிகாலையிலிருந்து 32 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கான் யூனிஸின் தெற்குப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 30 இற்கும் மேற்பட்ட வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசாவிற்குள் குறைந்தளவான உதவிகள் மாத்திரம் அனுமதிக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆனால் பொருட்கள் எப்போது அந்த பகுதிக்குள் நுழையும் என்பது தொடர்பிலான தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை.

சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *