உலகம்

பட்டினிச் சாவு அபாயத்தில் பல கோடி மக்கள்; வெளியான பகீர் தகவல்

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சா்வதேச உணவுப் பற்றாக்குறை அறிக்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் 29.53 கோடி போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளனா். பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்கள், மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது, பருவநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1.37 கோடி போ் கூடுதலாக உணவு பற்றாக்குறையை எதிா்கொண்டனா்.

காஸா முனை, சூடான், ஹைட்டி, மாலி, தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் மட்டும் 95 சதவீதம் போ் மிக மோசமாக உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனா். சூடானில் உள்நாட்டு போா் காரணமாக பஞ்சம் அறிவிக்கப்பட்டு, 2.4 கோடி போ் உணவு இல்லாமல் தவித்துவருகின்றனா்.

காஸாவுக்குள் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருகளை எடுத்துச் செல்லச் செல்ல விடாமல் இஸ்ரேல் இராணுவம் கடந்த மாா்ச் முதல் முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, 21 இலட்சம் போ் பஞ்ச அபாயத்தில் சிக்கியுள்ளனா்.

மியான்மா், நைஜீரியா, கொங்கோ உள்ளிட்ட 19 நாடுகளில் மோதல்களும், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் வறட்சியும் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் சா்வதேச நிதியுதவி அமைப்பான யு.எஸ்.எய்டின் நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் சூடான், யேமன், ஹைட்டியில் 1.4 கோடி குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *