உலகம்

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாக அறிவிப்பு

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாகவும், இனிமேல் பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மாகாணம் அல்லவெனவும் பலூச் தலைவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையும் தங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் தென் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி பலுச் விடுதலைப் படையினர் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் இராணுவத்தை கட்டவிழ்த்துள்ள பாகிஸ்தான் அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், இராணுவ அடக்குமுறையை எதிர்த்து பலுச் கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் இராணுவம் மீது பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானில் 44 சதவீத பரப்பளவை பலுசிஸ்தான் கொண்டுள்ளது.

இந்நிலையில் பலுசிஸ்தானின் பல பகுதிகளை பலுச் கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள அரசு அலுவலகங்களில் பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர்.

பலுச் தேசியவாதத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான மிர் யார் பலுச் தலைமையிலான “பலூசிஸ்தான் குடியரசு” என குறிப்பிட்டு தனி நாடாக பிரகடனம் செய்துள்ளார்.

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும் தாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம் என்றும் குறிப்பட்டுள்ள அவர் இனி நாங்கள் பலுசிஸ்தானியர்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பலுசிஸ்தான் குடியரசாக தங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பலுசிஸ்தான் விடுதலைப் படையினரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், பலுச் படையினரின் இந்த விடுதலை மற்றும் தனி நாடு அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *