இலங்கை

கொழும்பில் ஆட்சியமைக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவா?; மொட்டு கட்சி வெளியிடவுள்ள அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை. எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது கடந்த அரசாங்கங்கள் சாபம் என்று விமர்சித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

குறுகிய அரசியல் வெற்றிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும்.

ஒன்று சட்டத்தின் முன் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் அல்லது குறுகிய அரசியல் இலாபத்துக்காக பொய்யுரைத்தோம் என்பதை அரசாங்கம் மக்கள் மத்தியில் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்குழு கூட்டம் எதிர்வரும் வாரம் கூடவுள்ளது.

இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இந்த விடயம் குறித்து கட்சியின் ஆதரவாளர்களின் நிலைப்பாட்டை கோரவுள்ளோம்.என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *