உலகம்

இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தகவல்!

இந்திய ராணுவத்தின் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஊடகசந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிந்தவரை விரைவில் பதற்றத்தைக் குறைக்க விரும்புகின்றார் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *