இலங்கை

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். இதுவரை விமானிகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மீட்புபணியின் போது இரண்டு விமானிகள் உட்பட பயணித்த 12 படையினரும் மீட்கப்பட்டனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இலங்கை விமானப் படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *