சுமந்திரன் நன்றி கூறுகிறார்

வடகிழக்கு மாகாண தமிழ் வாக்காளர்ஙளுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக் குறிப்பில்,
தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு வடகிழக்கில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.
பாராளுமன்ற தேர்தலில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு மீண்டும் மக்களது ஆதரவைத் தமிழ்க் கட்சிகள் பெற்று கொண்டதில் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் நாம் எமது மக்களது நம்பிக்கை வீண் போகாமல் காத்திரமாக சேவை செய்வோம் என்றும் உறுதியளிக்கிறோம் – என்றுள்ளது.
![]()