உலகம்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் X பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப்பின் X கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டது. அமைச்சர் குவாஜா ஆசிப், “இந்திய இராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.

இதில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சொய்ப் அக்தரின் சேனல் மற்றும் பிரபல செய்தி நிறுவனங்களின் சேனல்களும் உள்ளடங்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *