உலகம்

சீனாவின் உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி

சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில், ஊழியர்கள் பாதுகாப்பு அம்சங்களை புறக்கணிப்பதால், தொழில்துறை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

உரிய முறையில் பராமரிக்கப்படாத உட்கட்டமைப்பு, சட்டவிரோதமாக சேமிக்கப்படும் இரசாயனங்கள் மற்றும் தீ வெளியேறும் வழிகள் மற்றும் தீ தடுப்பு இன்மை போன்ற காரணங்களே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *