இந்தியா

பொலிஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய கர்நாடக முதலமைச்சர்!

இந்தியாவின் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது.

இதில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த பா.ஜ.க.வினர் சிலர் முதலமைச்சர் சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்ச்ர் சித்தராமையா உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அழைத்து, நீங்க என்ன பண்றீங்க? என கேள்வி கேட்டு கை ஓங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

பொலிஸ் அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 வருடங்கள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *