இந்தியா

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருகையில் பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள் எதிர்வரும் தேர்தலில் சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்”

நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம்.
நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.

பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *