உலகம்

உதயநிதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய சாமுவேல் டுக்ரோகெட்!

பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் துறை தூதுவர் சாமுவேல் டுக்ரோகெட் (Samuel Ducroquet) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், தமிழக அரசு சார்பில், 17.47 கோடி ரூபாய் செலவில், ஒலிம்பிக் சங்கத்திற்காக, மூன்று மாடிக் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வகையில், வீரர், வீராங்கனையருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த சங்கத்தை நேற்றைய தினம் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் தறை தூதுவர் சாமுவேல் டுக்ரோகெட் பார்வையிட்டார்.

அத்துடன் குறித்த சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செயலாளர் அதுல்யமிஸ்ரா ஆகியோருடனும் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர் தலைமை செயலகம் சென்ற சாமுவேல் டுக்ரோகெட், துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *