கட்டுரைகள்

குறள்கூறும் பொருளில் பிறர் பார்வையும் என் பார்வையும் – பார்வை – 04 … சங்கர சுப்பிரமணியன்.

சங்கர சுப்பிரமணியன்

அறிவு என்பதற்கும் பகுத்தறிவு என்பதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அறிந்த ஒன்றை பகுத்தாய்வு செய்வதுதான் பகுத்தறிவு. ஆதலால் பகுத்தறிவு என்பது தீண்டத்தகாத சொல்லோ அல்லது பகுத்தாய்வு செய்வது தவறோ அல்ல. அதை மொழி மற்றும் இனம் கடந்து எவரும் செய்யலாம். பகுத்தாய்ந்து சொல்வதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை.

இப்படி பகுத்தாய்வு செய்வதில் தமிழரும் அடக்கம். ஏனென்றால் தமிழர் முட்டாள் அல்லவே. பகுத்தாய்வு செய்வதில் தமிழர் சிறந்தவர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதிலும் தமிழர் பூர்வீகமாக சில நாடுகளிலும் குடியேறி பல நாடுகளிலும்
வாழ்வதால் இந்த நாட்டுத் தமிழருக்குத்தான்
பகுத்தறிவு அதிகம் அல்லது அந்தநாட்டுத் தமிழர்களுக்கு பகுத்தறிவு குறைவு என்று தமிழரை கூறு போடும் பழக்கம் என்னிடம் இல்லை.

உலகில் எந்த மூலையில் எந்த இனத்தில் பகுத்தாய்வு செய்தாலும் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. பகுத்தறிவு என்பது திராவிடர் கழகத்தவருக்கோ திராவிட முன்னேற்ற கழகத்தவர்க்கோ எவரும் பட்டா போட்டு கொடுக்கவும் இல்லை. குத்தகைக்கு கொடுத்து விடவுமில்லை. ஆதலால் எவரும் ந

சமூகத்தில் நிலவிவரும் கருத்துக்களை
படித்ததும் வெந்த புண்ணில் வேலை்பாய்ச்சிய
நிலையை உணர்ந்தேன். அதனால் ஏற்பட்ட அறச்சீற்றம்தான் இக்கட்டுரை என்ற முன்னோட்டத்தோடு கட்டுரைக்குள் செல்கிறேன்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வார் பொருத்தல் தலை என எனக்கு வள்ளுவன் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதையும் மீறி ஒரு பாமரனாக இக்கட்டுரையை பகிர்கிறேன். அதே சமயம் பழுத்த இரும்பின்மேல் சம்மட்டி அடிவிழுவது
பொருளாக்கவே என்பதால் இக்கட்டுரை எழுத முனைப்பைத் தந்த சூழலை இடுக்கண் வருங்கால் நகுக என்றெண்ணி வரவேற்கிறேன்.

“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற குறளை இப்போது கட்டுரைக்காக எடுத்துக் கொள்வோம்.

இக்குறளுக்கு யார் யாரிடமிருந்து என்ன கேள்விப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மையை அறிவதே அறிவு என்பதே பொதுவான பொருளாகும்.

இதனை நான் வேறு ஒரு கண்ணோட்டத்தில் காண்கிறேன். நமக்கு வேண்டப்பட்டவர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஒன்றை ஏற்றுக் கொள்வதோ வேண்டாதவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தவிர்ப்பதோ அழகல்ல. விருப்பு வெறுப்பின்றி அவற்றை பகுத்தாய்வு செய்தபின் நமக்கு எது சரியென அகவுணர்வு சொல்கிறதோ அதுதான் அறிவு என்பது என் கருத்தாகும்.

How many Thiruvalluvar's are there? Is Thiruvalluvar a Brahmin? - Quoraஒரே இனத்தினர் என்றாலும் ஒருநாட்டினரை மற்றொரு நாட்டினருடன் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காண்பது சரியாகாது. அந்தந்த நாட்டின் வரலாற்று பின்னணியை சற்றும் ஆயாமல் கருத்து சொல்வது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற வள்ளுவன் வாய்மொழி நிற்பதாகும். சான்றாக மலேசியத் தமிழரையும் பிஜித் தமிழரையும் ஒப்பீடு செய்வதை எந்த வகையில் நியாயப்படுத்த முடுயும்?

ஔவையைம் வள்ளுவனும் கம்பனும் பாரதியும் தோன்றிய மண்ணில் தோன்றியவர்கள் முற்போக்கும் பகுத்தறிவும் குறைந்தவர்களாக இருப்பார்களா? தொல்காப்பியம் எனும் இலக்கணநூல் கண்ட மண்ணில் பிறந்தோர் முற்போக்கோ பகுத்தறிவோ இல்லாதவராகவா இருப்பர். நம்மை சிறந்தவர் என்று நாமே சொல்லக்கூடாது. அதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால்தான் அதில் சிறப்பு இருக்கும். மற்றபடி காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதான்.

கடாரம் வரை சென்று தமிழர் புகழை பறைசாற்றினான் சோழன் என்று என்று நான் சொல்லவில்லை உலகமும் வரலாறும்தான் சொல்கிறது. இந்த வரலாற்றை மறந்து தமிழரை எதிலும் முன்னோடிகள் அல்ல என்று சொன்னால் நாம் என்னவென்று சொல்வது?

தமிழரின் பின்னடைவு கிமு 2000 – 1500 காலகட்டத்திலேயே சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவிலிருந்து தொடங்கி விட்டது. இந்த பின்னடைவு பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரை சுல்தான் ஆட்சியை தொடர்ந்து விஜயநகரப் பேரரசின் கீழ்வந்ததம் இன்னும்மோசமானது. அந்த காலகட்டத்தில் இந்துக்களின் உரிமைகள் மீட்கட்பட்டதேயன்றி சமஸ்கிருதமும் தெலுங்குமே போற்றப்பட்டு தமிழ் வீழ்த்தப்பட்டது.

சங்ககாலம்தொட்டு விஜயநகர ஆட்சியாளர் வருகை வரை ஓங்கியிருந்த தமிழினம் தம்மை ஆண்ட மன்னர்களின் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சமஸ்கிருத மொழியை தூக்கிச் சுமந்த ஆட்சியாளர்களால் அம்மொழி எளிதாக கற்று பேசமுடியாத மொழியாக இருந்தமையால் சமஸ்கிருத மொழியை ஆட்சி மொழியாக்க முடியவில்லை.

அடுத்தபடியாக வழிபாட்டுக்குரிய மொழி சமஸ்கிருதமே என்று ஆட்சியாளர்கள் நம்பியதால் அதுவரை கோவில்களில் வழிபாட்டு மொழியாக இருந்த தமிழ்மொழி அகற்றப்பட்டு சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது. மராத்திய மற்றும் விஜயநகர ஆட்சியில் அல்லலுற்றிருந்த தமிழ்நாட்டுத் தமிழர் பதினாறாம் நூற்றாண்டில் விடுபட்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் ஓரளவுக்கு தலைதூக்க முடிந்தது.

Thiruvalluvar: The eternal guru – Native Krea Art Gallery

பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி தொடங்கி 1947வரை சிலபகுதிகளை தவிர ஆங்கிலேயர் ஆட்சிதான் இருந்தது. இந்திய விடுதலைக்கு பிறகு தமிழ்நாடு நீதிக்கட்சி திராவிடர் கழகம் போன்று வேற்றுமொழி பேசுபவர்களின் பிடியில் சென்றது.

திராவிடர் கழகம் இறைமறுப்பு கொள்கையை விதைத்தது. அக்கொள்கையை ஏற்கும் நிலையில் தமிழ்நாட்டில் அன்று சூழல் இருந்தது. அதன் காரணத்தை வரலாறு படித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். எந்த கொள்கையும் மக்களின் ஆதரவின்றி நிலைத்திருக்காது. ஒரு கொள்கையை ஏற்பவர்களை முட்டாள் என்று சொல்லாது அதன் மெய்ப்பொருள் காண்பதே அறிவு.

சான்றாக அரிஸ்டாடில் பூமியை உருண்டையானது என்று கூறுவதற்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரும் முட்டாள்களா? பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழிந்து கொண்டான் ஒரு அரக்கன் என்று சொன்னதையும் நம்பி அந்த கடலே பூமியில்தனே இருக்கிறது என்று சிந்திக்ககூட மறந்திருந்த மக்கள் முட்டாளா? எல்லாம் சூழ்நிலைதான்.

கால ஓட்டத்தில் திரவிடர் கழகத்துடன் முரண் ஏற்பட கொள்கையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சமரசம் செய்து திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது. கட்சியில் கணக்கு கேட்டதால் அதிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டு அண்ண திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது.

மூகாம்பிகைக்கு வைரவாள் கொடுத்து பகுத்தறிவுக்கு அன்று அதிமுக
விடைகொடுத்தது. இன்று திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையையும் விட்டு வேல் யாத்திரையை வீரியமாக நடத்தி பகுத்தறிவு என்பதை விரட்டியே விட்டது. இதுதான் அரசில்கட்சிகளின் பகுத்தறிவு.

Thiruvalluvar in white or saffron? Debate springs up again in Tamil Nadu after Governor Ravi's post | Chennai News - The Indian Expressபகுத்தறிவை திரு. ஈ.வே. ரா அவர்களோ அல்லது வேறு எவரோ தமிழருக்கு கற்றுத்தரவில்லை. பகுத்தறிவு தமிழர் குறுதியுடன் பிறந்தது. நக்கீரனார் பேசியிருக்கிறார். சிவவாக்கிய சித்தர் தம் பாடல்கள் மூலம் பறைசாற்றியுள்ளார். மேற்குலகிலும் தத்துவஞானியான சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ போன்றோர் பகுத்தறிவாளர்களாக இருந்திருக்கின்றனர்.

தமிழரை திமுகவினர் முட்டாளாக்கவில்லை. விஜயநகர ஆட்சியில் வீழ்ந்த கிடந்த தமிழை ஆங்கிலேயரின் ஆட்சிக்குப்பின் எழுச்சியுறச் செய்வதாக சொன்ன திமுகவினரின் கூற்றை நம்பியதால் ஏமாற்றப் பட்டுள்ளனர் என்பதே சரி. எந்த நாட்டில் அரசியல் கட்சியினர் அந்நாட்டு மக்களை ஏமாற்றவில்ல?

அப்படியானால் அந்த நாட்டு மக்களெல்லாம் முட்டாள்களா? இந்தித்திணிப்பை தமிழ்நாட்டில் கொண்டுவருவதை அன்றைய காலகட்டத்தில் திமுகவினர் தீவிரமாக எதிர்த்தனர். அதை நம்பியது முட்டாள்தனமா?

இவ்வாறு வந்தவர்களால் தீண்டாமை, சாதிசார்ந்த பிரச்சினை, கோவிலுக்குள் நுழையமுடியமை, வரதட்சணை, மூடப்பழக்கங்கள், போன்றவை புகுத்தப்பட்டன. இது தவிர
சுல்தான் படையெடுப்பு, விஜயநகர ஆட்சி, நாயக்கர்கால ஆட்சி, மராத்தியர் ஆட்சி, தமிழ் மன்னர்களுக்குள் பிணக்கு ஏற்படவைத்து அழித்த சூழ்ச்சி, தமிழர் தடயங்களை அழித்து வேறுமுகம் காட்ட நினைப்பவர்களின் கபடத்தனம் என்று பலவற்றைக் கூறலாம்.

அத்ததோடு தமிழ் மொழியையே சிதைக்க முனைந்தவர்களின் முயற்சியை நடக்காமல் தடுத்த தனித்தமிழ் இயக்கம், அந்த இயக்குத்துள்ளே இருந்து முதுகில் குத்திய துரோகிகள் என்று இப்படி எண்ணற்ற பிரச்சனைகளைக் கடந்து வந்தவர்கள் தமிழர்.

இவ்வாறு எந்தப் பிரச்சினைகளையுமே சந்திக்காது பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா என்று பாடுவதைப்போல
தமிழரை முட்டாளாக்கினர் என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழர் வஞ்சிக்கப்பட்டனர் என்பதே சரி.

இதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியமாக விடை இருக்கிறது. அப்படியிருக்க தம்மினதிருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு | About Thiruvalluvar in Tamil மக்களையே முட்டாளாக்கி பெருமிதம் அடைவதில் என்ன சிறப்புள்ளது? பொதுவாக என் இனமென்றாலும் அடுத்த நாட்டு அரசியலில் தலையிடுவதோ அவர்களை அந்நாட்டு அரசியல்வாதிகள் முட்டாளாக்கினர் என்று சொல்லும் வழக்கமோ என்னிடம் இல்லை.

எனவே மக்களை திமுகவினர் முட்டாளாக்கினர் என்று எண்ணாமல் நம்பிய மக்களை ஏமாற்றி விட்டனர் அல்லது வஞ்சித்து விட்டனர் என்பதே மெய்ப்பொருள் ஆகும். ஆகையால் யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்காமல் அதில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை அறிய வேண்டும்.

அந்த உண்மையை அறிய மெய்ப்பொருள் காணவேண்டும். மெய்ப்பொருள் காண அது சம்பந்தமான பின்புலங்களை ஆய்வு செய்யவேண்டும். அதன்பின் அகவுணர்வு என்ன சொல்கிறதோ அதுதான் அறிவு என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

-சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *