இலங்கை

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்தது.

ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.

50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளதாக தபால் மாஅதிபர் பீ. சத்குமார தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *