உலகம்

உக்ரேனுக்கு நன்கொடை அளித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் விடுதலை

உக்ரேன் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க-ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியமைக்காக இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்   அபுதாபியில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதன்போது குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டின் பேரில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *