தென்னகோனை பதவி நீக்கும் தீர்மானம் இன்று சமர்ப்பிப்பு; 10 ஆம் திகதி ‘பட்டலந்த” விவாதம்

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இன்று 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10 மணி வரையில் நிலையியற்கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10 மணி முதல் மு.ப 11 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், 11 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல்மாலை 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவதுமதிப்பீடு, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான
கட்டளை ஆகியவற்றின் விவாதத்திற்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதேவேளை 10ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 9.30 மணி முதல் 10 மணி வரையில் நிலையியற்கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 10மணி முதல் 11மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், 11 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 11.30 மணி முதல்மாலை 5.30 மணிவரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச்சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்தப்படும் , இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாள் மே மாதத்தில் ஒதுக்கப்ட்டும் என்றார்
![]()