இலங்கை
குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ -நால்வர் உயிரிழப்பு!

குருநாகல் வெஹெர பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()