இலங்கை

மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது – 140 கோடி இந்தியர்களுக்கும் பெரும் என்கிறார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது எனக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயம் ஆகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டதையடுத்து பிரதமர் மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமையாகும்.

இது இந்திய இலங்கை மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் ஆழமான நட்புக்கு கிடைத்த மரியாதையாகும். உண்மையான அண்டை நாடாகவும் நண்பராகவும் நமது கடமைகளை நிறைவேற்றியிருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

2019 பயங்கரவாதத் தாக்குதல், கோவிட் தொற்றுநோய், சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம்.

எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான ‘மகாசாகர்’ ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *