உலகம்

3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப்

மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.

தற்போது கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று, 2ஆவது முறையாக ஜனாதிபதியானார். 3ஆவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்க தேர்தல் விதிப்படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து ட்ரம்ப் கூறுகையில் : 3ஆவது முறையாக ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நான் கூறுவது நகைச்சுவை அல்ல. இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருக்கிறது.

இது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது கவனம் முழுவதையும், 2ஆவது ஜனாதிபதி பதவிக் காலம் மீது வைத்துள்ளேன். என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *