இலங்கை

யாழில் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; அரசின் சதியே காரணமா?; நீதிமன்றுக்கு செல்லும் சங்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்ட அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் பல நிராகரிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தில் இரண்டு சபைகளை தவிர ஏனைய சபைகளிற்கு நாங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். இதில் எங்களுடைய பல சபைகள் நிராகரிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

இவ்வாறு நாங்கள் மாத்திரமல்லாமல் பல கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒரே காரணத்துற்காக நிராகரிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

ஆனால் நிராகரிக்கப்பட்டதற்காக எமக்கு கூறப்படுகின்ற காரணத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனெனில் தேவையான அனைத்தையும் நாம் வழங்கி இருக்கிறோம்.

ஆகையினால் வேறு ஏதேனும் காரணங்களுக்காக எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அழுத்தம் இதில் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே தான் இதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செல்வோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *