ரணிலைத் தூக்கில் போட்டாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை

நாங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பாதுகாக்க முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவை தூக்கில் போட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில்,
மதுபானசாலை உரிமை பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியலை சபைக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. ரணில் விக்ரமசிங்க மதுபானசாலை உரிமைப்பதிரம் வழங்கி அரசியல்வாதிகளை தனது பக்கம் இழுத்துக்கொண்டதாக தெரிவித்தார். அப்படியானால் அந்த பெயர் பட்டியல் எங்கே ?. இந்த அரசாங்கத்தை பட்டியல் அரசாங்கம் என்றே அழைக்கின்றார்கள் ஏனெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மதுபானசாலை உரிமை பத்திரம் பெற்றுக்கொண்வர்கள் என பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேநேரம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எரிபாெருள் நிரப்பு நிலையங்கள் வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதேபோன்று ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்கள்.
ஆனால் இந்த எந்த பெயர் பட்டியலிலும் எனது பெயர் இல்லை. 2001 இல் இருந்து இருக்கிறேன். மதுபானசாலை பத்திரம் எடுக்கவும் இல்லை. வேறு அனுமதி பத்திரங்கள் எடுக்கவும் இல்லை. அரயல் தேவைக்கோ எனது சோந்த தேவைக்கோ ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றதும் இல்லை. அதேபோன்று அரச சொத்துக்களை துஷ்பியோகம் செய்ததும் இல்லை. எனத கரங்கள் தூய்மையானவை .
பட்டலந்த விவாதம் இடம்பெறவுள்ளது .இந்த காலப்பகுதியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற இருக்கின்றன. அதனால் இந்த விவாதத்தை பிற்படுத்துமாறு தெரிவிக்கும்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கப்போவதாக தெரிவிக்கின்றீர்கள். நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பாதுகாக்க முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவை தூக்கில் போட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. நிலைமையை புரிந்துகொண்டு செயற்படுமாறே கூறுகின்றோம் என்றார்.
![]()