பலதும் பத்தும்

ரயிலின் கடைசி பெட்டியில் ‘X’ குறி இருப்பது எதற்காக தெரியுமா

கார், மோட்டார் சைக்கிள், விமானங்கள், பேருந்துகள் என்றிருந்தாலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு முதன்மையான போக்குவரத்து என்றால் இன்றும் ரயில்கள் தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களது தேவைகளுக்காக ரயில்வே போக்குவரத்தை பயன்படுத்தி வருவது இன்றும் தொடர்கிறது. கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை ரயில் வழி பயணம் செய்வோர் இன்றும் இருக்கிறார்கள்.

நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். தொடர்வண்டிகளின் பயன்பாடு குறித்த பலரும் பலது அறிந்திருந்தாலும், ரயில்வே செயல்பாடுகளில் பின்பற்றப்படும் சில விஷயங்கள் இன்றும் நம்மை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் ‘X’. இந்தியாவில் மக்கள் பயணம் செய்யக்கூடிய எல்லா ரயில்களின் கடைசிப்பெட்டியில் ‘X’ என்ற குறி மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு இருக்கும்.

ரயிலில் பயணம் செய்த அல்லது பயணம் செய்துகொண்டு இருக்கும் பலரும் ‘X’ என்ற குறியை கவனித்திருப்போம். ஆனால் இது எதை குறிக்கிறது. ‘X’ என்பதற்கான அர்த்தம் என்ன..? என்ற சிந்தனை ஒரு சிலருக்கு தான் தோன்றியிருக்கும். ஒரு ரயில் முழுமையடைந்த நிலையில் உள்ளது, அதில் எந்த பழுதோ அல்லது பிரச்சனையோ இல்லை என்பதை குறிக்க ‘X’ என்ற குறி பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ரயில்களின் இடைப்பட்ட பெட்டிகள் மற்றும் அதன் இணைப்புகளில் எந்தவிதமான பழுதோ , பிரச்சனையோ இல்லை என்பதை ‘X’ குறி குறிக்கிறது.

தொடர்ந்து இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும். ரயிலின் கடைசிப்பெட்டியில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவலும் உள்ளது. அது தான் ‘LV’ (Last Vehicle) என்ற ஆங்கில வார்த்தைகளை தாங்கிய பலகை. கடைசிப்பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்படும் இருக்கும்.

ஒரு ரயில் பாதுகாப்பாக உள்ளது என்பதை துறை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிந்துக் கொள்ளவே ‘LV’ எழுத்துக்களை தாங்கி பலகைகள் இது கடைசி பெட்டி என்று தெரிந்துகொள்ள மாட்டப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *