இலக்கியச்சோலை

கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் “பறக்க தயங்கும் பட்டாம்பூச்சிகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பாக கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சிகள் என்கின்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

எழுத்தாளர் சோலச்சி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவானது புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் வெளியிட டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்விற்கு கே ஆர் தர்மராஜன் கோகிலா பள்ளியின் முதல்வர் இராபர்ட் முன்னிலை வகித்தனர். கவிஞர் சாக்கிய பிரபு நிகழ்ச்சியை வரவேற்றார். எழுத்தாளர் கனிமொழி செல்லத்துரை மற்றும் எழுத்தாளர் பாண்டி செல்வம் ஆகியோர் நூல் குறித்து ஆய்வு செய்தனர். செங்காந்தள் பதிப்பகத்தின் நிறுவனர் எழுத்தாளர் பவுலி , மொழியில் ஆய்வாளர் முனைவர் ஏசுராசா, கவிஞர் பாலச்சந்திரன், பேராசிரியர் ஆறுமுகம், கவிஞர் நிரோஷா, கவிஞர் மு கீதா, போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வின் முன்னதாக மரம் ராஜா அவர்களால் மகளிர் தின விழாவை கொண்டாடும் விதமாக ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. கொட்டும் அருவி கோவிந்தசாமி அவர்கள் மகளிர் தின பாடலை பாடினார் . எழுச்சி கவிஞர் முருகேசன், கவிஞர் இந்துமதி,  கவிஞர் சின்ன கனகு, கவிஞர் அழ கணேசன், கவிஞர் ஹேமா பூபேஷ், உலக கவிஞர் பீர்முகமது போன்றோர் கலந்து கொண்டனர். கவிஞர் செங்கை தீபிகா ஏற்புரை வழங்கி நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *