இலங்கை

தமிழ் மக்கள் கூட்டணி தனித்து மான் சின்னத்தில் போட்டியிடும்; உள்ளூராட்சித் தேர்தல் குறித்து மணிவண்ணன்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து மான் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

குறித்த விடயத்தை அக்கட்சியின் உறுப்பினரும் யாழ் மாநகர முன்னாள் முதல்வருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உறுதிப்படுத்தினார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தரப்புக்கள் கலந்துரையாடியிருந்தன.

இந்நிலையில், இந்தக் கூட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *