பலதும் பத்தும்
அரிசோனா பாறை ஓவிய சிந்து எழுத்து

ஓவியத்தை இயல்பு அல்லாத முறையில் வரைந்திருந்தால் அது ஓவியம் அல்ல எழுத்து என்றேன். இந்த ஓவியமும் அப்படித் தான் இயல்பு அற்றது.
The Maze Rock petroglyphs, carved by the Ancient Puebloans (A.D. 850–1300). Vermilion Cliffs National Monument, Arizona.
காது குண்டலம் – ந; இன்னொரு குண்டலம் – ண்; செவ்வகம் – ட; கவிழ்ந்த ப – ப; இரு ஐந்து விரல்கள் – ய்ய, மீன் முள் – ன்; நத்தை கூடு – ந; இரு மீன் – ச்ச; இணைப்பு ^ – ன்
இதை நண்டபய்யன் நச்சன் என்று படிக்க முடிகிறது. நசிதல் என்றால் அழித்தல். “அன்” ஈறு வினையில் நச்சன் என்றால் இறந்தான் என்று ஆகுமோ? இதாவது நண்டபையன் இறந்துவிட்டான் என்கிறதா எழுத்து?
சிந்து முத்திரையில் நண்டன் என்ற பெயர் வழங்குகிறது. எனினும் இங்கு வாழ்ந்த செவ்விந்தியர் இனத்தை வைத்து இதன் காலம் 1,200 ஆண்டுகள் என்று தவறாக கணிக்கப்பட்டுள்ளது.
சிந்து எழுத்தை படிக்கத் தெரிந்தவர் பார்வை வேறு ஆனால் பொது மக்கள் பார்வை வேறு. நத்தையை இரு தலை நாகம் என்று வியக்கின்றனர் பெயரை குறிக்க நத்தையின் கூடாரங்களை மீனாக வரைந்து உள்ளனர் என்பதை அறியாதவர்கள்.
நத்தை முன்னே உள்ள புதிர்நிலை மண்ணில் அதன் வலையை ஒத்தது. முழுக்க முழுக்க மீன், நத்தை, மீன் முள் என்று வரைந்ததை பார்த்தால் மீனவர் என்று தெரிகின்றது.
![]()