இலங்கை

இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது… விசைப் படகுகளும் பறிமுதல்

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடி துறைமுகத்தின் உரிய அனுமதிச் சீட்டுடன் விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

அச் சமயம் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி குறித்த மீனவர்கள் 10 பேரை கைது செய்ததோடு, அவர்களது மூன்று விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத் தகவலறிந்த சக மீனவர்கள் மற்றும் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுவிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *