யாழ்.கடற்றொழிலாளர்களைப் பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த சீனாவுக்கு இடமளியோம்

வடக்கே எமது கற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைமடி படகுகளால் எமது கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சீனா எம்மை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் சீனா தூதரக அதிகாரிகளை எமது கடற் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம்.
அவர்களை சந்தித்ததன் நோக்கம் கடந்த கொரோனா காலங்கள் மற்றும் இந்திய இழுவைப் படகுகளினால் பாதிக்கப்பட்ட எமது கடற்றொழிலாளர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்தார்கள். அதற்கு நன்றியை தெரிவித்ததோடு தொடர்ந்தும் இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்பட்டு வரும் எமது கடற்றொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம்.
இதே கோரிக்கையை இந்திய அரசிடமும் முன் வைத்திருக்கிறோம். யார் எமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் அதை நாம் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
இந்தியா அத்துமீறிய இழுவைமடிப் படகுகளால் தொடர்ச்சியாக நாம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எமக்கு உதவி செய்கிறோம் என எமது கடல் பிராந்தியத்தால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சீனா எம்மை பயன்படுத் எதிர்பார்த்தால் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம்
இந்தியா எமது அயல் நாடு. அது மாத்திரமல்ல எமது தொப்புள் கொடி உறவு என்ற ரீதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எமது கடலை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
![]()