பலதும் பத்தும்

விண்வெளி வீரர்களுக்கான உடையை வடிவமைத்த சீனா

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலவுக்கு செல்லும் மனிதன் அணியும் உடையை சீன விண்வெளி மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு வாங் யு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மனிதன் அமர்ந்து செல்லும் வகையிலான டான்சுவோ எனும் வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலைவனத்தில் நிலவு போன்ற ஒரு மாதிரியை உருவாக்கி அங்கு இவ் வாகனம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *