உலகம்

உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக்
கூறினார்.

உக்ரெய்ன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கம் நிலையில் ரம்ப் பதவியேற்ற உடன், போரை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ட்ரம்ப் , ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *