பலதும் பத்தும்
கலர் பூசிய ஐஸ் மலை!

கண்களுக்கு குளுமையும் மனதுக்குள் இனிமையும் சேர்க்கும் இந்த மலை பெரு நாட்டில் உள்ளது, இதன் பெயர் வினிகுன்கா அல்லது வானவில் மலை என்று அழைக்கப்படுகிறது!!!.
பெருவில் உள்ள இந்த வானவில் மலைத்தொடர்கள், பெருவியன் ஆண்டிஸ் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன. (Peruvian Andes) இந்த மலைத்தொடர்கள் தான் உலகின் மிகவும் நீளமான மலைத்தொடர்களாகும்! இது இமயமலை தொடர்களை போல இரண்டு மடங்கு நீளமாகும்!!!
உண்மையான வானவில் போல பல்வேறு அழகிய வண்ணங்கள் இயற்கையாக தோன்றுவதால் இந்த இடம் பெருவில் உலக அளவில் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
பெருவில் உள்ள வானவில் மலைகளின் தனித்துவமான நிழல்கள், அவற்றின் புகழ் பெருகக் காரணமாக அமைந்தன.
வினிகுங்கா (Vinicunca) என்றும் அழைக்கப்படும் இந்த வானவில் மலை, குஸ்கோ cusco என்ற இடத்தில் அமைந்துள்ளது.
வினிகுங்கா மலை, ஏழு நிறங்களின் மலை, வண்ணங்களின் மலை, வானவில் மலை என பல பெயர்களில் அழைக்கப்படும் வானவில் மலைகள், உலகின் இரண்டு இடங்களில் உள்ளன. அவை சீனாவின் ஜாங்கியே டான்சியா தேசிய பூங்கா வானவில் மலை மற்றும் பெரு வானவில் மலை.
![]()