இந்தியா

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்!

1960 மற்றும் 1970களில் தமிழ் சினாமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை புஷ்பலதா. 87 வயதான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்த சூழலில் திடீரென   அவர் காலமானார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் 1960, 70களில் கோலோச்சிய முக்கிய நடிகைகளில் ஒருவர் புஷ்பலதா.. இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் எனப் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிகளிலும் கூட அவர் பல படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். 1958ம் ஆண்டு செங்கோட்டைச் சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். 1963ம் ஆண்டு ஏ. வி. எம். ராஜன் நடிப்பில் வெளியான நானும் ஒரு பெண் திரைப்படத்தில் இவரும் நடித்திருந்தார். படத்தின் ஷூட்டிங்கில் இருவரும் காதலித்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

1960களில் மற்றும் 1970களில் படுபிஸியாக இருந்த புஷ்பலதா, ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தார். 1980களில் அவர் படங்களில் நடிப்பதைக் குறைத்திருந்தார். அவர் கடைசியாக 1999ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீபாரதி இயக்கத்தில் முரளி, நளினி உள்ளிட்டோர் நடித்திருந்த பூ வாசம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். அவர் பிறகு மத ரீதியான நலப்பணிகளையும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *