இலங்கை

77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம்!

இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இன்று காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *