இலங்கை

வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றி மகிந்தவுக்கு உயிராபத்து ஏற்படுத்த பெரும் சதி

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட இல்லத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது வசிக்கின்றார். அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமாயின் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும், அதனை விடுத்து தவறான முறையில் அவரை அங்கிருந்து வெளியேற்ற இடமளிக்க மாட்டோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெறமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லாம் தொடர்பில் போகும் இடமெல்லாம் ஜனாதிபதி கதைக்கின்றார். தமது குறைப்பாடுகளை மூடி மறைப்பதற்காக இந்த விடயத்தை எடுக்கின்றனர். எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நீங்கள் பங்காளியாக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே அந்த வீடு வழங்கப்பட்டது. உத்தியோகபூர்வமாகவே அது வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தியோகபூர்வமாக வசிக்கும் வீட்டை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் உத்தியோகபூர்வமாக அறிவியுங்கள். அதன்பின்னர் ஒரு நிமிடமேனும் இருக்காது அவர் அங்கிருந்து போய்விடுவார்.

ஆனால் நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் இது தொடர்பில் கூறிக்கொண்டு அவரை கேவலப்படுத்தி, அவரை அங்கிருந்து வெளியேற்றும் தவறை செய்ய நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. அதன்பின்னர் அவரின் உயிருக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடாக மற்றும் டயஸ்போராக்கள் ஊடாக ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இதனூடாக சூழ்ச்சியில் ஈடுபடுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எவ்வாறாயினும் அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டுமாயின் அதனை உத்தியோகபூர்வமாக அறிவியுங்கள். ஆனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. அதில் இருந்து விலகியிருக்க நாங்கள் இடமளிக்கப் போவதில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *