இலங்கை

வீடு கட்டுவதற்காக மகிந்தவுக்காக ஒரு ரூபா

மகிந்தவுக்கு தகுந்த வீட்டினை கட்டிக்கொடுக்க நாட்டு மக்கள் தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை இந்த வீட்டில் இருந்து வெளியில் அனுப்பினால் நாட்டு மக்களிடம் ஒவ்வொரு ரூபாவாக வாங்கியேனும் நாங்கள் நாட்டைக் காத்த தலைவர் மகிந்தவுக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன் தினம் மகிந்த ராஜபக்சவின் விஜேராமயவிலுள்ள இல்லத்திற்கு சென்று திரும்பும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு கூறினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் மகிந்த ராஜபக்சவின் நலன் விசாரிக்கச் சென்றேன் மகிந்த ராஜபக்ச என்பது ஒரு பெயரல்ல ஒரு நாமம்.

அத்துடன், நாம் அச்சமடையத் தேவையில்லை குற்றம் இழைத்திருந்தால் தண்டணை வழங்குவதற்கான உரிமையுண்டு. ஆனால் அரசியல் குரோதங்களுடன் அரசியல் எதிர்தரப்பினரை நடத்திய அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவானது.

ஏதோவொரு வகையில் மகிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியில் பழிவாங்க முயற்சிக்கும் போது அதனை அரசியல் அநாகரிகமாகவே பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *