பலதும் பத்தும்
இந்தியாவில் முதன் முறையாக Hyperloop வழியாக பயணிக்க பரிசோதனை

உலகின் போக்குவரத்து வழித்தடங்களான
வாகனம்
நீர்வழி
ஆகாயம்
ரயில்
Star Ship( ஆகாய கப்பல்-பரிசோதனையில் உள்ளது).
தற்போது சென்னை ஐ.ஐ.டி (IIT) வளாகத்தில் இந்தியாவில் முதன் முறையாக Hyperloop வழியாக பயணிக்க பரிசோதனை நடக்க உள்ளது. இந்த போக்குவரத்து முறையானது வெற்றிட குழாய் (Vacuum Pipe) மூலம் பயணிப்பது ஆகும்.
உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதே போன்று அமெரிக்காவில் தனியார் (Elon Musk) உருவாக்கும் ஆகாய கப்பல் சோதனை வெற்றியடைந்து அதற்கான
கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கினால் அமெரிக்காவிலிருந்து இந்தியா வர 3 – மணி நேரம் போதுமானது.
தற்போது சென்னை IIT Hyperloop பரிசோதனையை அடுத்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்த உள்ளது.
இப்போட்டியில் உலகம் முழுவதுமிருந்து 400 நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது.
பாதையும், பயணங்களும் மனிதத்தை தொலைக்காமல் இருக்கட்டும்.
![]()