முச்சந்தி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒன்றிணையும் கட்சிகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் குழுவில் சிலர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இற்த மூன்று கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு டார்லி வீதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் 27ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, அநுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து நீங்கிய குழு சார்பில் பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்ட குழுவும், சர்வஜன பலய சார்பில் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.

இந்தக் காரணங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *