கவிதைகள்

“மூச்சடக்கி நீ எடுத்த ஆழ் கடல் முத்தை பரிசாக்குகிறாய் ” …. கவிதை …. யாழ் எஸ் ராகவன்….

இதயத்தின் அழைப்பு மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது
வாசலிலேயே நின்றுகொண்டிருக்கிறேன்
பகல் இரவுகள் கடந்தபடியிருக்கின்றன
நீளும் அழுக்கடைந்த கரங்களிலெல்லாம்
மூச்சடக்கி நீ எடுத்த
ஆழ் கடல் முத்தை பரிசாக்குகிறாய்
சாத்தானின் நிழல் என தெரிந்தும்
அப்பொழுது மலர்ந்த
பூக்களை அன்பளிக்கும்
அரவணைப்பு
உன்னிடமிருந்தே தொடங்குகிறது
எனது ஒளி என்பதெல்லாம்
உனது நிழலன்றி வேறென்ன
படரும் உன்
பார்வை ஈரத்தின் ஆழத்தில்
ஆசுவாசம் அடைகிறது நம் பிரியம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *