நாம் பார்க்கும் மனிதர்கள் நாம் பார்க்கும் கோணத்தில்….

ஓவியக் கல்லூரியில் ஒரு மாடல் மனிதரை நிற்க வைத்து அவரை சுற்றிலும் ஓவியம் படிக்கும் மாணவர்களை சுத்தி நிக்க வைத்து வரையச் சொன்னார்கள்.
அனைவரும் தங்களால் பார்க்க முடிந்த மனிதரை அப்படியே வருகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக ஒரே மனிதனின் வரைபடம் வந்தது.
இதேபோல்தான் வாழ்க்கையும் நாம் பார்க்கும் மனிதர்கள் நாம் பார்க்கும் கோணத்தில் தான் தெரிவார்களே தவிர அவர்களுடைய உண்மையான நிலை நாம் அறிவதில்லை .
நம்முடைய வாழ்க்கையிலும் இத்தகை உதாரணங்கள் ஏராளமாக நடந்திருக்கும் நாம் ஒரு மனிதரை ஒரு மோசமான மனநிலை கொண்டவராக நினைத்து பதிவு செய்து வைத்திருப்போம்.
ஆனால் ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அந்த மனிதனுடைய நல்ல குணம் மாறி நமக்கு பிரதிபலிக்கும் பொழுது நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை வந்திருக்கும்
ஆகவே நாம் பார்க்கும் நிலை வைத்து அந்த மனிதரை முடிவு செய்வதை விட்டுவிட்டு நாம் பார்க்கும் சூழலே அதற்குக் காரணம் என்பதை புரிந்து கொள்ளும் பொழுது நமக்கான கோபமும் ஏமாற்ற மனநிலையும் மாறி நாம் நிம்மதி பெறலாம்….
![]()