19 ஆம் திகதி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பிறந்த தினம்!

இம்மாதம் 19 ஆம் திகதி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பிறந்த தினம் !
இதனை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெய்நிகரில் நடத்தும் கருத்தரங்கு !!![]()
![]()
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் நிறுவனரும். அமெரிக்கா – ஹவார்ட் பல்கலைக்கழகம் உட்பட வேறும் சில பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்தவரும், பிரபல எழுத்தாளரும் பல நூல்களை படைத்தவருமான அ. முத்துலிங்கம் அவர்களுக்கு இம்மாதம் 19 ஆம் திகதி 88 வயது பிறந்த தினம்!

![]()
![]()
தமது இலக்கியப்பிரதிகளினால், இலங்கை, இந்தியா , சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் வதியும் தீவிர வாசகர்களினால் நன்கு அறியப்பட்ட முத்துலிங்கம் அவர்கள், இலங்கையில் வடபுலத்தில் கொக்குவிலில் அப்பாத்துரை- ராசம்மா தம்பதியருக்கு 1937 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி பிறந்தார்.
கொக்குவில் இந்துக்கல்லூரி மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரான முத்துலிங்கம் அவர்கள், கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற பின்னர் இலங்கையில் பட்டயக் கணக்காளர் தேர்விலும் இங்கிலாந்தில் முகாமைத்துவ பட்டயக்கணக்காளர் தேர்விலும் சித்தி பெற்றவர்.
1950 களில் இலக்கியப்பிரவேசம் செய்திருக்கும் முத்துலிங்கம் அக்கா என்ற தனது முதலாவது கதைத்தொகுதியை வரவாக்கினார். இந்நூலுக்கு பேராசிரியர் க. கைலாசபதி அணிந்துரை எழுதியுள்ளார்.
அதன்பின்னர் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்த முத்துலிங்கம் ஆபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது தொழில் நிமித்தம் வாழ்ந்தார்.
சுமார் மூன்று தசாப்த காலம் இலக்கிய பிரதிகள் எழுதாமல் தனது தொழில் சார் பணிகளில் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் முத்துலிங்கம் அவர்கள், மீண்டும் படைப்பு இலக்கியத்தில் கவனம் செலுத்தினார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர், இவரது திகடசக்கரம் என்ற சிறுகதைத் தொகுதி வெளியானது. அதன்பின்னர் தொடர்ச்சியாக இலக்கிய உலகில் பேசப்பட்ட படைப்பாளியாக விளங்குகிறார்.
சிறுகதை, நாவல், கட்டுரை, புனைவு சாராத பத்தி எழுத்துக்கள் நேர்காணல், பயண இலக்கியம் முதலான துறைகளில் எழுதிவரும் முத்துலிங்கம் அவர்களின் படைப்பு மொழி ரசிக்கத் தகுந்தது.
தமது படைப்புகளுக்காக பல பரிசுகளும் விருதுகளும் பெற்றிருக்கும் அ. முத்துலிங்கம் அவர்களை இலங்கையில் மல்லிகை, ஞானம், தமிழ்நாடு சொல்வனம், கனடா காலம் இதழ்கள் அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவித்துள்ளன.
நூலுருப்பெற்றுள்ள இவரது படைப்புகள் :
சிறுகதைத் தொகுப்புகள்![]()
அக்கா – திகடசக்கரம்- வம்சவிருத்தி- வடக்கு வீதி-
மகாராஜாவின் ரயில் வண்டி –
அ. முத்துலிங்கம் கதைகள் முழுதொகுப்பு- ( 2003 வரை எழுதியவை. )
அமெரிக்கக்காரி-குதிரைக்காரன்- கொழுத்தாடு பிடிப்பேன் ( தேர்ந்தெடுத்த சிறுகதைகள் )
பிள்ளை கடத்தல்காரன்- ஆட்டுப்பால் புட்டு![]()
![]()
அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகங்கள்.
ஒலிப்புத்தகம்
அ.முத்துலிங்கம் சிறுகதைகள் – ஒலிப்புத்தகம்
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan
After Yesterday – Translated from Tamil – Short stories- Translation by Padma Narayanan
கட்டுரைகள்
அங்கே இப்ப என்ன நேரம்?
பூமியின் பாதி வயது
கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது –
வியத்தலும் இலமே (நேர்காணல்கள்)
அமெரிக்க உளவாளி
ஒன்றுக்கும் உதவாதவன்
தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள்
தோற்றவர் வரலாறு

அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு தொகுதிகள்
நாவல்கள் உண்மை கலந்த நாட்குறிப்புகள் கடவுள் தொடங்கிய இடம்
———————————————————-
அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு
19-01-2025 – ஞாயிற்றுக்கிழமை
தலைமை : கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம். )
அறிமுகவுரை – லெ முருகபூபதி. – அவுஸ்திரேலியா
முத்துலிங்கம் சிறுகதைகள்
அனோஜன் பாலகிருஸ்ணன் – பிரித்தானியா
முத்துலிங்கம் நாவல்கள்
கேசநந்தன் அகரன் ( பூமிநேசன்) பிரான்ஸ்![]()

முத்துலிங்கம் புனைவுசாரா எழுத்துக்கள்
ஜிஃப்ரி ஹாஸன்- இலங்கை .
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய ( 2023 ) இலக்கியப்போட்டி முடிவுகள்:
அறிவிப்பு : பாடும்மீன் சு. சிறிகந்தராசா
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : நோயல் நடேசன்.
அவுஸ்திரேலியா நேரம் மதியம் 12.00 மணி
நியூசிலாந்து : மதியம் 2.00 மணி
இங்கிலாந்து : அதிகாலை 1.00 மணி
ஜெர்மனி : அதிகாலை 2.00 மணி
பிரான்ஸ் : அதிகாலை 2.00 மணி
இலங்கை – இந்தியா : காலை 6.00 மணி
கனடா : இரவு 8.00 மணி (Saturday 18th)
Zoom Meeting https://us06web.zoom.us/j/81224003054?pwd=q7WZz6VNC4tBXF388iB1baKHQRVLGA.1 Meeting ID: 812 2400 3054 Passcode: 516885
![]()