பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞர்

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வானில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளன்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

உடனடியாக பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், சாலையில் வந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றி கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தவுலகல, ஹபுகஹயதென்ன பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வாகனம் வாடசைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், கடத்தல் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *