இந்தியா

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்

சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார்.

ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளைப் பெற்றதால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதால் இக் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பிய தேர்தல் ஆணைக்குழு,

‘கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், கட்சியின் சின்னமாக விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்க கோரப்பட்டுள்ளது.

இந்த சின்னங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *