இந்தியா

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்

நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

இது தொடர்பில் குறித்த பத்திரிகையாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், இவ் வழக்கை ரத்து செய்யக்கூடாது என பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ் வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் ரூபாய் 15 ஆயிரம் அபராதமும் விதித்தது.

அபராதத் தொகையை செலுத்திய பின்னர் தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று இத் தண்டனையை நிறுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறிருக்க எஸ்.வி.சேகருக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *