முகநூல்

கொழும்பு – மட்டக்குளியில் கடத்திச் செல்லப்பட்ட நபர்

மட்டக்குளி, சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று (29) பிற்பகல் புகுந்த குழுவினர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கடத்தலுக்கு முச்சக்கர வண்டியில் ஆறு பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறே கடத்தலுக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *