கட்டுரைகள்

“செருப்பு – விருப்பும் வெறுப்பும்”….  வ. சிவப்பிரகாஷ் 

வ. சிவப்பிரகாஷ் 

செருப்பு, அநேகர் வாழ்வில், முதலில் காலோடு காலாகப் பின்னிப் பிணைகின்ற ஒரு பொருள். போகப் போக, அவர்களோடு பலவகைகளிலும் இணைந்து, கூடவே பயணிக்கும் ஒரு அம்சமாகி விடுகிறது.

வாருங்கள், செருப்பு நடந்த பாதையை கொஞ்சம் பார்த்து வருவோம்.

முற்காலத்தில் பாதத்தைப் பாதுகாப்பதால் பாதரட்சை (ரக்ஷா – ஹிந்தியில் காப்பு அல்லது பாதுகாப்பு) என்று அழைக்கப்பட்டது. பாத அளவிலான, பெரு விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையே கொழுவக் கூடிய ஒரு குமிழுடன் மரத்தாலான கட்டையால் செய்யப்பட்டவற்றை, கால்க் கட்டை அல்லது பாதுகை என்று சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

காலில் அணிவதால் காலணி/பாதணி எனப் பெயர் பெற்றது. என்றாலும், அந்தப் பாதத்துக்கு, கொஞ்சம் – சிலவேளை அதிகமாகவே – ‘அழகு’ சேர்க்கும் பணியையும் செய்வதால், இங்கே அணி என்பது வெறுமனே போட்டுக் கொள்வது (அணிவது) என்பதோடு அடங்கி நின்றுவிடாமல் ‘அழகு’ என்பதைக் குறித்து கொஞ்சம் பகட்டைக் காட்டுகிறது. இங்கே, காலில் போட்டாலும் அது அழகாக இருக்க வேண்டுமென மினக்கெடுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

மனிதன் முதலில் உடலுக்கு ஆடை என்று போடத் தொடங்கியது இயற்கைக் காரணிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே தவிர மற்றவர் பார்வைக்காக அல்ல. அடுத்தவர் பார்வையிலிருந்து மறைப்பதற்காக (வெட்கம்) அல்லது, பிறர் கவனத்தை ஈர்க்க என்றெல்லாம் நினைத்தது பின்னர் தான். ‘ஆடையே அடையாளம்’ என்ற நினைப்பும் பின்பு வந்தது தான். இங்கே தான் பாதுகாப்பு பகட்டானது. இப்படி எத்தனையோ விடயங்கள் முதலில் ஓர் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடங்கினாலும் காலப்போக்கில் பகட்டில் முடிந்திருக்கின்றன.

என்னது இந்த ரப்பர் செருப்பு குவைத்தில் 1 லட்சம் ரூபாயா! வாயடைத்து போன  இந்தியர்கள்! வைரலாகும் வீடியோ/Kuwait store sells trendy Slippers for Rs 1  lakhசரி, சரி, செருப்பு எங்கோ வழுக்கிக் கொண்டு போகிறது (அதற்கு slippers என்றும் பெயர் இருப்பதில் ஆச்சரியம் இல்லை).

செருப்புக்கு எப்படித் தடம் மாற முடியும்? கால்கள் இழுத்த இழுப்புக்குப் போகும். கால்கள் கூட மனம் போன போக்கில் தானே போகின்றன. ஆனால், மனமோ ஒரு குரங்கு. பிரச்சினை தலையில் இருக்க காலுக்குக் கீழே இருக்கும் செருப்பை நோவானேன்? மனம் நொந்த மனிதருக்கும் செருப்புக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கிறது. காலில் அணியும் போது, நேரடியாக நிலத்துடன் தொடர்பு படுகிறது. மண்ணிலும், கல்லிலும், முள்ளிலும், இன்னும் பல அழுக்குகளிலும் பட்டுத் தேய்கிறது. அதனால், அதிகம் நடப்பவர்கள் இருக்கும் சமூகத்தில், மற்றவர்களுக்கு உழைத்து உதவி செய்து களைக்கும் மக்கள் (விரக்தியில்) பேசும் வார்த்தை: – ‘நான் செருப்பாய் உழைத்துத் தேய்ந்தது தான் மிச்சம்…’

பிரதிபலன் இல்லாது வேலை செய்பவர்களுக்கு எடுத்துக்காட்டாகிற இந்தச் செருப்பு, வெறுப்பு அல்லது பகை என்று வரும்போது கையில் எடுத்துக் காட்டவும் உதவி இருக்கிறது. 70, 80 களில் காதலைச் சொல்வதற்குச் சில தைரியமான வாலிபர்கள் நேரே செல்வார்கள். அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றால் அவள் கையில் எடுக்கும் செருப்புத் தான் பதில். கொஞ்சம் அவசரமாக அல்லது அநாகரிகமாக நடந்து கொள்ளும் வாலிபர்களுக்குத் தான் இந்தக் கவனிப்பு.

இங்கே, என் கவனத்தை ஈர்த்தது என்னவென்றால், பருவப் பெண்கள் தான் என்று இல்லாமல், சில வயதானவர்களே தங்கள் கோபத்தை அடக்க முடியாமல் காலில் போடும் செருப்பைக் கையில் எடுப்பது தான். கிடைக்கக் கூடிய வேறு எல்லாவற்றையும் விட்டு விட்டு இவர்கள் செருப்பை நாடுவதற்குக் காரணம், தங்கள் ஆத்திரத்தை, எதிராளியைக் கேவலப்படுத்துவதன் மூலம் காட்ட வேண்டுமென்பதே. கேவலத்துக்குரிய இரண்டு இயல்புகள் செருப்புக்கு உள்ளன:
ஒன்று: மிகவும் அழுக்கானது.

இரண்டாவது: எற்கனவே குறைவாக மதிப்பிடப்படும் காலுடன் தொடர்பாக இருப்பது. (இளக்காரமாகச் சொல்லவேண்டுமென்றால் ‘கால்த் தூசிக்குச் சமம்’ என்பார்கள். தூசி எங்கும் இருந்தாலும் கால்த் தூசியின் தரம் மிகவும் கீழ்த்தரமானது)

இப்படியான சந்தர்ப்பங்களில் அந்த இரண்டு தரப்பினரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தாலும், செருப்புக்கென்னவோ ஒரு சந்தோசம் – ஒரு சில நொடிகளுக்கு – காலில் இருந்து கைக்கு உயர ஒரு சந்தர்ப்பம் வருவதால். எப்போதும் காலுக்குக் கீழேயே கிடப்பதால் மற்றவர் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதேயில்லை. அதுவும் மிதிபடுவதும், மிரண்டு ஓடுவதுமே வாழ்க்கையாக இருக்கும் தன்னால் மிரட்டக் கூட முடிகிறதென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியும் பெருமையும் தானே!

மிரட்சிக்கும் செருப்புக்கும் நெருங்கிய உறவு. கிட்டத்தட்ட 90 கள் வரை (சிலவேளை இன்னும்செருப்பு [புதுக் கவிதை] | Bigtemple Blog தான்) இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் நடந்து போவோர் பலர் முகம் கொடுப்பது வீட்டு அல்லது தெரு நாய்களுக்கு. அவர்கள் சந்திக்கும் நாயுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை என்றால் எடுப்பது என்னவோ ஓட்டம் தான். உயிரைக் கையில் பிடித்து ஓடும் பலர் செருப்பை ஒழுங்காகக் காலில் கொழுவி ஓடத் தவறி விடுவார்கள். அல்லது அவர்களது அவசரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறுந்து அனாதரவாகும் செருப்புகள் அநேகம். ஆயிரக் கணக்கான மக்கள் கூடும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் எப்போதாவது கலவரங்கள் நடக்கும் போது ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செருப்புகளே அந்த சம்பவங்களின் தீவிரத்தைப் பறை சாற்றும்.

ஓடும் போது சொந்தக்காரர் தான் கைவிட்டு (உண்மையில் ‘கால் விட்டு’) ப் போனாலும் சோடியாகக் கழரும் செருப்புகளுக்கு என்னவோ மறுவாழ்வு கிடைக்க வழி இருக்கும். ஆனால் எல்லாச் செருப்புக்கும் அந்தக் கொடுப்பினை இல்லை.

இந்தச் சோடிப் பிரச்சினை, ஓடும் போது மட்டும் இல்லை. வேறு இடங்களிலும் நடக்கும். செருப்பென்றால் ‘வெளியில்’ தான் என்ற கலாச்சாரத்தை சில இடங்களில், சில காலங்களில் (ஏன் சில இடங்களில் இப்போதும்) கண்டிருக்கிறேன். கோயில்களின் வாசலில் அல்லது விசேட நிகழ்ச்சி நடக்கும் மண்டபங்களின் வாசலில் செருப்புகளின் படையல் ஒரு காட்சி. இப்பொழுது இருக்கிறதோ தெரியவில்லை, ஆனால் 80 கள் வரை இப்படியான இடங்களில் செருப்பு காணாமல் போவது அல்லது மாறுவது என்பது ஒரு வழக்கம். முக்கியமாக, கல்யாண வீட்டுக்கு வருபவர்கள் தங்கள் ஆடைக்கேற்ற கொஞ்சம் தரமான செருப்பு அணிந்து வந்து வெளியே விட, அங்கே ‘தரமான’ சம்பவங்கள் நடப்பதுமுண்டு. உள்ளே மாலை மாற்றி ஒரு சோடி சேர, வெளியே ஓரிரு சோடிகள் ‘கால் மாறும்’. திருமணத்திற்கு வாழ்த்தப் போகிறவர்கள் ஒருபுறம்; இப்படி எதையாவது எடுத்து வர என்று போகிறவர்கள் இன்னொரு புறம்.

இந்த மாதிரி, செருப்பை எடுக்க வருபவர்களுக்கு நான் ஒரு புதிர் வைப்பதுண்டு. நானே, என் ஒவ்வொரு செருப்பையும் வெவ்வேறு திக்கில் வைத்துவிடுவேன். யாராவது ஒன்றைக் கண்டு நன்றாக இருக்கிறதென்று ஆசைப்பட்டு அதன் சோடியைத் தேடுவதற்குள் நான் வந்து அவரைக் ‘காலும் களவுமாகப்’ பிடித்து விடலாம் அல்லவா! அப்படி நானே தூரத் தூரப் போட்டுவிட்டு, பின்னர் வந்து நெடு நேரமாகத் தேடிக்கொண்டிருக்க மற்றவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்த தருணங்களும் உண்டு.

செருப்பு - Her Storiesகல்யாணத்திற்கு என்று வந்தாலும் அநேகர் தாங்கள் வெளியே விட்ட செருப்பையே நினத்துக் கொண்டு உள்ளே இருப்பதாலோ என்னவோ, இப்போதெல்லாம் மணவறை வரை செருப்போடு வர விடுகிறார்கள் (கோவிலில் இல்லையென்றால்). இருந்தாலும், அட்சதை போட்டு, கல்யாணப் பரிசைக் கையளித்து, படத்துக்கு போஸ் கொடுக்கும் போதும் எனக்கு, கீழே கழற்றி விட்ட செருப்பை மறக்க மனம் கூடுவதில்லை.

கோயிலைப் பொறுத்தவரை, இப்போதெல்லாம் எந்த விக்கிரகத்தை எங்கே வைப்பதென்று முடிவு செய்வதோடு, செருப்புப் பாதுகாப்புக்கு எந்த இடம் ஒதுக்குவது என்பதும் முக்கியமாகும் அளவுக்கு, செருப்பின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. செருப்புகளை இலவசமாகவோ அல்லது ஒரு சிறு கட்டணத்துடனோ பாதுகாக்க ஒரு அறை; அங்கே அளவான Pigeonholes உடன் கூடிய தட்டுகள்; செருப்பை வாங்கி, உரிய இடத்தில் வைத்து, அதற்குரிய ‘டோக்கன்’ கொடுத்துக் காசை வாங்குவதற்கென ஓர் ஆள் (அநேகமாக சம்பளத்துக்கு) வைத்து நடத்தும் அளவிற்கு வந்துவிட்டது.

உண்டியலில், ஐயரின் அர்ச்சனைத் தட்டில் கூட காசு போட யோசிக்கும் நான், செருப்புப் பாதுகாப்புக்கு எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடுவேன். கடவுள் நம்பிக்கையுடன் உள்ளே போகும் எனக்கு, எனது வேண்டுதலையே கடவுள் நிறைவேற்றினாலும் வெளியில் விடும் செருப்பு நான் திரும்பி வரும் போது இருக்குமா என்பதில் மட்டும் நம்பிக்கை இல்லை. முன்பொரு காலத்தில் – முக்கியமாக, கொழும்பு போன்ற மாநகரங்களில் – சந்தைக்கு மரக்கறி வாங்கப் போனால், கடைக்காரர், மரக்கறிக்குக் காசு வாங்கி விட்டு, ஒரு சிறு கட்டு கறிவேப்பிலையை இலவசமாகக் கொடுப்பார். Goodwill ஐ maintain பண்ண – தொடர்ந்தும் தன்னிடமே காய்கறிக்கு வரட்டும் என்று. அதுபோல், ஆண்டவனும், தன் மக்கள் உள்ளே வந்து, அவர்கள் சிந்தனையைச் செருப்பில் சிதற விடாமல், தன்னைக் கும்பிடுவதிலேயே செலுத்த வேண்டும் என்றால், பக்தன் வைக்கும் வேண்டுதல்களோடு ‘யாம் இருக்க, பயம் ஏன்? உன் செருப்புக்கும் எந்த ஆபத்தும் வராது’ என்று, உத்தரவாதத்தையும் கொடுக்க வேண்டும்.
செருப்பை வெளியே கழற்றி விடுவதற்கு அசுத்தம் மட்டும் தான் காரணமா என்று யோசித்துப் பார்க்கிறேன்.

வெளியே அழுக்கான இடங்களில் போடும் செருப்பு உள்ளே போவது முறையல்ல என்பதால்செருப்பு தொலைந்த கதைகள் | செருப்பு தொலைந்த கதைகள் - hindutamil.in வெளியே கழற்றி விடுகிறார்கள். சரி. ஆனால் சிலர்,கோயிலுக்கு உள்ளே போகவில்லை என்றாலும், வெளியே நின்று கும்பிடுவதானாலும் கழற்றுகிறார்களே! சிலவேளை, சாமியை வீட்டிலே கும்பிடும் போது, விளக்கு ஏற்றுதல் போன்ற காரியங்களைச் செய்யும் போதும் கூடக் கழற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே – ஏன் என்று தெரியவில்லை.

சுத்தமான (கோயில் போன்ற) இடங்களுக்குள் நுழைய முன் கழற்றிய பழக்கம் தான், கோயிலைக் கண்டதும் கழற்றத் தூண்டுகிறதோ? சுத்தமான (புனிதமான) இடம் என்ற செய்தி மூளைக்குப் போனதும், செருப்பென்றால் அழுக்கு என்று கணித்து, அது தன்னிச்சையாக, காலில் இருந்து செருப்பை உதறி விடுகிறதா?

ஈரம், குளிர், சூடு, தூசு போன்றவற்றில் இருந்து காப்பதற்காகப் (சிலவேளை காலில் புண் அல்லது காயம் காரணமாக) போடும் செருப்பை (அது புதியதாகவே/சுத்தமாகவே இருந்தாலும்) சிலர் பெருமை / பணிவு / வணக்கத்துடன் தொடர்பு படுத்துகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆண்டவனை அல்லது பெரியவர்களை வணங்கும் முன் எளிமையாக இருக்க விரும்புவதால் தான் கழற்றுகிறார்களோ தெரியவில்லை. ஆனால், அந்தக் கொள்கை அவர்கள் போட்டிருக்கும் ஆடை, நகைகளுடன் முரண்படும்.

எளிமை என்றதும் தான், ஆட்சியில் இருந்த இரண்டு பெண்மணிகளின் கதை நினைவுக்கு வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டை ஆண்ட எமல்டா மர்கோஸ் செய்த ஊழல்களுக்கு எல்லையே இல்லை. அவர் பிடிபட்டபோது அவரிடம் கிட்டத்தட்ட 3,000 சோடி காலணிகள் இருந்ததாகச் செய்தி வெளியானது. இது போல் இந்தியாவின் தமிழ் நாட்டிலும் முதல்வர் ஜெயலலிதா சேர்த்த கோடிக் கணக்கான சொத்துகளோடு நூற்றுக் கணக்கான சோடி செருப்புகளும் அடங்கும்.

என்னுடைய வருமானத்துக்கும் வங்கியில் உள்ள பண இருப்புக்கும் என்னிடமே 5 சோடி செருப்பு இருக்கும் போது நாட்டை ஆண்ட இவர்களிடம் இத்தனையா என்று நினைப்பதே பெரிய தவறு.

பிலிப்பைன்சிலும் இந்தியாவிலும் இரு மங்கைகள் இப்படிச் செய்து அவர்கள் நிலையைத் தாழ்த்தினாலும், இரு நாட்டுக்கும் இடையில் இருக்கும் மலேசியா தன் நாட்டு அரசு சின்னமாக பாதுகைகளை ‘ஏற்றி’ வைத்திருக்கிறது.

பாதுகைகளை மலேசியா அரசு சின்னமாக வைத்ததற்கும் ராமாயணத்திற்கும் தொடர்பு இருக்குமோ என்று யோசிக்கிறேன்.

எப்படியாயினும், இந்த செருப்பு/காலணி க்கு இதிகாசத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம்.
ராமன் வனவாசம் புறப்பட்டபோது, பரதன் அயோத்தியில் இல்லை. பரதன் திரும்பி வந்து, செய்தி கேட்டுப் பதை பதைத்து அண்ணனைத் தேடி அழுதபடி ஆரண்யம் செல்லும் வழி ஓடுகிறான். அண்ணனைக் கண்டதும் காலில் விழுந்து, திரும்பி வரும்படி மன்றாடுகிறான். ராமன் மறுக்கிறான். ‘உன் பாதுகைகளையாவது கொடு (காலில் விழுந்த போது கண்ணில் பட்டதாலோ?); கொண்டு போகிறேன்; உனக்குப் பதிலாக நாட்டை உன் பாதுகைகள் ஆளட்டும்’ என்று இறைஞ்சுகிறான். ராமன் கொடுக்க, அண்ணனுடைய காலணிகளைத் தன் தலை மேல் (ஏன் தலை மேல்? எடுத்த பணியை சிரமேல் கொண்டு செய்வதென்பது இதுதானோ?) வைத்துக் கொண்டு அயோத்தி திரும்புகிறான்.

ராமன் இல்லாத 14 வருடமும் அரியணையில் பாதுகைகளை வைத்து அரசாங்கம் செய்தான்.
இங்கே சில கேள்விகள்:

கால்களில் செருப்பு அணிவதால் எப்படி பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும்?  வாங்க தெரிஞ்சுக்கலாம்.. | How Footwear Can Help Increase Blood Circulation?  - Tamil BoldSky• ஏற்கனவே துறவறம் என்று அண்ணன் எல்லாவற்றையும் விட்டுச் செல்லும் போது, காலுக்குக் காவலாக இருந்த காலணியைப் போய் கேட்டானே பரதன்! தனக்கு அரியணை ஏறப் பிடிக்கவில்லை என்றால் ராமனே அங்கு இருப்பதாக மானசீகமாக அரசாட்சி நடத்தியிருக்கலாம். அப்படி ராமனிடம் இருந்து தான் ஏதாவது வேண்டும் என்றால் ஒரு துண்டுத் துணியையோ, துரும்பையோ ராமனிடம் இருந்து வாங்கிக் கொண்டு போயிருக்கலாம். ஏன் காலணி? (வேறு சிலவற்றைக் கேட்டு, ராமன் கொடுக்கவில்லையென்றால் ‘காலணியையாவது கொடு’ என்று கேட்டிருக்கலாம். அப்படியில்லாமல் எடுத்த எடுப்பிலேயே ஏன்?).

• இங்கே காலணிக்குக் கொடுக்கப்பட்ட இடம் என்ன – ராமனிடம் இருந்தவற்றில் அது தான் சிறந்ததா? அல்லது, ‘நீ வேறு எந்த பெறுமதியானதையும் தர வேண்டாம்; அழுக்குக் காலணியையாவது தா’ என்று கேட்டதன் மூலம் காலணி கீழ்த்தரமானது தான் என்பது உறுதிப்படுகிறதா?

• அப்படி காலணியின் தரம் இழிவு தானென்றால், இதில் கைகேயியைப் பழிவாங்கும் எண்ணம் உண்டா? ‘அந்த அரியணையில் ராமன் ஏறக் கூடாது என்று நீ விரும்பினாய். இப்போது பார், ராமனின் பாதணிகளைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று காட்ட முயன்றானா?

• ராமன் இல்லாத அயோத்தியை 14 வருடங்கள் பாதுகைகள் ஆண்டன என்றால் அது காலணிக்கே கீர்த்தி அல்லவா? வேறு எந்தப் பொருளுக்கும் கிடைக்காத வாய்ப்பு செருப்புக்குக் கிடைத்ததென்று நினைக்கும் போது பெருமையாய் தான் இருக்கிறது. இல்லையென்றால், அங்கும் காலணி இழி நிலை தான் ஆனால், அவை ராமனுடையவை என்பதால் சிறப்பு என்கிறார்களா?

• முற்பிறப்பில் அல்லது கர்மாவில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக ஒரு கொசுறுக் கேள்வி. இந்தப் பாதுகைகள் ராமனுடனேயே வனவாசம் போயிருந்தால்…எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கும்? சிலவேளை 14 வருடங்கள் கழித்து திரும்பி வந்திருக்குமோ தெரியாது. ஆனால் அவை செய்த அதிர்ஷ்டம் அல்லது முன்வினைப்பயன் காரணமாக அவை படவேண்டிய துன்பங்களில் இருந்து விடுதலை கிடைத்தது மட்டும் அல்லாமல் அரியணையில் அல்லவா இடம் கிடைத்தது? ராமனே ஆட்சி செய்தால் கூட அவன் போட்ட காலணிக்கு ஒருக்காலும் அரியணை ஏற வாய்த்திருக்காது. இது பரதனால் கிடைத்த வரப்பிரசாதம் அன்றோ!
Stepping into someone’s shoes என்று ஆங்கிலத்தில் ஒரு ‘idiom’ (மரபுத் தொடர்) இருக்கிறது. ஒருவர் சொல்வதை, அவர் அனுபவிப்பதை (நிலையை), அவருடைய இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பார்கள்.

தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் செருப்பு அணிவது மிகப்பெரிய குற்றமாம்...  காரணம் என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! | Bizarre Tamil Nādu Village Where  People ...செருப்பின் வெள்ளைக்கார வடிவம் தான் shoe. shoe கள் பல அளவுகளில் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நபரும் நீங்களும் ஒரே அளவு shoe தான் போட்டாலும், அவருடைய shoe வை நீங்கள் அணியும் போது தான் உங்களுக்கு அது எப்படியான உணர்வைத் தருகிறது என்று தெரியும். இந்த நிலை உங்களுக்கு இயல்பாக இருக்காது. சிலவேளை அசௌகரியமாகக் கூட இருக்கும். ஆனால் அந்த shoe கால ஓட்டத்தில் அவருடைய காலுக்கு இயைந்து விட்டதனால் (உங்களுக்கு எப்படி உங்களுடையது இயல்பாக இருக்கிறதோ, அப்படி) அவருக்கு வசதியானதாக மாறியிருக்கும். மற்றவருடைய நம்பிக்கைகள், கருத்துகள், உணர்வுகளும் ஏறக்குறைய இப்படித்தான் என்பதை உணர்த்தவே அந்த Idiom.

அதுபோல் இதுவரை நானும் செருப்பை நாம் என்னவென்று கருதி அணிந்து வந்தோமோ என்பது இருக்க, செருப்பு என்னவெல்லாம் நினைத்திருக்கும்; எப்படியெல்லாம் உணர்ந்திருக்கும் என்று சொல்ல முயன்றேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *