சபாநாயகர் பதவி விலகியது பாராட்டத்தக்கது – நாமல்

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக பதவி விலகியமை பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊழலற்ற தூய்மையான பாராளுமன்றத்தை உருவாக்குவதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வை எனவும் இதன் காரணமாக அரச அதிகாரிகளின் தகுதிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் எனவும் நாமல் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *