கட்டுரைகள்

‘உளவு நிறுவனங்கள்’… தொடர் 45 … மௌனஅவதானி

போராளிக் குழுக்களுக்கு தனது ஒற்றர்களை அனுப்பி, போராளிக் குழுக்களின் நடவடிக்கையை அவதானித்தது மட்டுமல்ல போராளிக் குழுக்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மையை உருவாக்கிய இந்திய உளவு நிறுவனம்,தனது ஒற்றர்கள் மூலம் முடியாத செயல்களையெல்லாம் முடிக்கமுடியும் என ஒவ்வொரு போராளிக் குழுத் தலைமைகளிடமும் திரும்பத் திரும்பச் சொல்ல வைத்து வெற்றிவெறியாளர்களாக மாற்றியது.
இதனால் போராளிக் குழுக்கள் ஒன்றுக்கொன்று காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒன்றையொன்று அழிக்க முற்பட்டன, அழிக்கவும் செய்தன.

இலங்கை அரசக்கெதிராக தொடுக்கப்பட்டிருக்கும் ஆயுதப் போராட்டம் எதை நம்பி நடத்துவது என்பதைச் சிந்திக்க விடாமல் மக்கள் தாமாக ஆயுதப் போராட்டந்தான் ஒரே வழியென்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தலை, துரோகிகள் என குற்றஞ்சாட்டல் மூலமாக மரணதண்டனை வழங்களை இனப்பற்று என்ற போர்வையில் வாயிலாக மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றியது.உறவுகளுக்குள்ளேயே மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களை மரணதண்டனைக்குரியவர்கள் என அவர்களின் இறப்புக்கு காரணமாக்கினார்கள்.

இலங்கையில் என்றுமே அமைதியாக அரசாட்சி செய்யும் அரசு அமைந்துவிடக்கூடாதென்ற பாரிய வேலைத் திட்டத்தை மிகவும் தெளிவாக நடத்திக் கொண்டிருந்தது இந்திய உளவுப் பிரிவு.

தமிழர்களால் நெருக்கடிக்குள்ளாகும் அரசும், தமிழர்களை விரோதிகளாக அரசியல் வழியாக நோக்கும் அரசும்,சிங்களவர்களும் எதிர்பார்த்தபடியே உருவாகத் தொடங்கினர்.

குறைந்தளவு சனத் தொகையைக் கொண்ட தமிழர்களையும் அதற்கமைவான பொருளாதார வழங்களைக் கொண்டு அவ்வினக் குழுமத்திற்குள் தோன்றிய புத்திசீவிகள் ,ஆயுதப் போராட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் வெற்றியைத் தேடித் தராது பெரும் உயிர் அழிவுகளையும் பொருளாதார அழிவுகளையுமே அதன் பலனாகப் பெறுவோம் என அவ்வப்போது சொல்லிய போதெல்லாம் அவர்களைத் துரோகிகளாக்கி மரணதண்டனைக்குரியவர்களாக்கியது.

ஓவ்வொரு போராளிக் குழுக்களுக்குமிடையில் போராளிகளாக வேசம் போட்டிருந்த உளவாளி ஒற்றர்கள், புத்திசீவிகள் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றதே எனத் தலைமைகள் உள்வாங்கிய போதெல்லாம் அவர்கள் இலங்கை அரசிற்கு விலைபோனவர்கள், இத்தகையவர்களால் எமது போராட்டம் அழிந்துவிடும் புத்திசீவிகள் துரோகிகளே என தொடர்ச்சியாகச் சொல்வதன் மூலம் தலைமைகளுக்கு மூளைச்சலவை செய்து அவர்களை இசைவாக்கம் செய்ய வைத்தனர்.

போராளிக் குழுக்களினால் மரண தண்டனைக்குட்பட்டவர்கள் ஏன் மரதண்டனைக்குட்படுத்தப்பட்டனர் என்பதை துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்குஎ வெளிப்படுத்துகையில் அவர்களை மிகவும் மோசமாகச் சித்தரித்துக் காட்டினர்.
இதனால் மரணதண்டனைக்குட்பட்டவர்தான் தமிழ் இனத் துரோகி என தமிழர்களில் ஒரு பகுதியினரும், படித்தவர்கள் சொல்வது யதார்த்தந்தானே என இன்னொரு பகுதியினரும் தமிழர்களுக்குள் எதிரெதிராகஉருவாகத் தொடங்கினர்,பிளவுபடவும் தொடங்கினர்.
இந்திய உளவுப் பிரிவினர்,இலங்கை அரசையும் தமிழர்கனையும் சிங்களவர்களையும்,முஸ்லீம்களையும் கீழ்வரும் நிகழ்ச்சி நிரல் அட்டவணைக்கமையவே கையாண்டனர்.

1.இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தியமை.

2.தாங்கள் பெரும்பான்மையாகவிருந்தும் அரசாங்க திணைக்களங்களில் தமிழர்கள் அதிகாரிகளாகவும்,உத்தியோகத்தர்களாகவும் இருப்பதுடன் வணிக நிறுவனங்களும் அவர்களின் கைகளிலேதான் இருக்கின்றன என்பதனால் சிங்களவர்கள் காழ்ப்புணர்வும் வெறுப்பும் கொள்ள வைத்தமை.

3.இனக்கலவரத்தின் மூலம் சிங்களவர்களை தமிழர்கள் எதிரியாக நினைக்க வைத்தமை.
4.காலத்துக்குக் காலம் நடைபெற்ற இனக்கலவரங்களினால் தனிநாட்டு எண்ணத்தை தமிழ் அரசியல்வாதிகளின் மனதில் வேரூன்றச் செய்தமை.

5.பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக சிங்களவர்கள் மத்தியில் இனவாதிகளைக்: கொண்டு தமிழருக்கே இனி இலங்கை உடமையாகும் என்ற பிரசாரத்தினால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நெருக்குதலினால் அவ்வொப்பந்தத்தை கிழித்தெறிய வைத்தமை.

6.அரசியலில் எதிர்ப்புச்சமநிலை பேணுதல் என்ற அணுகுமுறை உண்டு.தமிழர்களிடம் அபிமானம் பெற்ற எந்தவொரு சிங்கள தலைமைகளும் இருக்கக்கூடாதென்பதற்கமைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா – செல்வநாயகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பண்டாரநாயக்காவின் எதிர்ப்பினால் கிடப்பில் போடச் செய்தமை.

7.தமிழர்களின் உரிமைக்கான அறவழி அரசியலை கணக்கிலெடுக்கத் தேவையில்லை எனச் சிங்களத் தலைமைகளுக்கு அறிவுரை வழங்கியமை.

8.பல கட்டமைப்புகளைக் கொண்ட முப்படைகளின் பலமான அணியைக் கொண்ட ஒரு அரசினை ஆயுதப் போராட்டம் மூலம் பணிய வைக்கலாம் என்ற உற்சாகமிகு ஆலோசனைகளை தனது ஒற்றர்கள் மூலமாகச் சொல்லியமை.

9.அதற்காக, இலங்கை ஒரு இறைமையுள்ள நாடென்று தெரிந்த போதும் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் நிரந்தரமான பகையாளிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக,தமிழபு; போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தமை.

10.இந்திராகாந்தியின் ஆலோசனைகளைக் கேட்க மறுத்த ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென்பதற்காகவும் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தமை.

11.ஆயுதப் போராட்டம் படிப்படியாக வளர்ச்சியடைய வைத்தமை,அதன் காரணத்தால் இலங்கையைவிட்டுத் தமிழர்களை புலம்பெயர வைத்தமை.

12.இலங்கையில் தொடர்ந்து வசித்து வருகின்ற தமிழர்களின் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கான ஆயுதக் கொள்வனவு நிதிப் போதாக்குறை ஏற்படுமென கண்டறிந்து புலம்பெயர்ந்த தமிழர்களை அதற்கு ஈடாக மாற்றியமை.

13.யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றப்பட வைத்தமை மூலம் மூஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் விரோதத்தை ஏற்படுத்தியமை.

14.புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தும் இந்தியத் தூதராலயங்கள் மூலமாகவும் ஊடுருவி ஈழத்தமிழரின் ஆயுதப் போர் சோழ பாண்டிய மன்னர்களின் போருக்கு ஒப்பானதெனவும் அதை விஞ்சியதெனவும் பத்திரிகை வாயிலாகவும் ஒருவருக்கொருவர் அதுசார்ந்த உற்சாக வார்த்தைகளை பிரச்சார வழியாகவும் பரிமாறிக் கொள்ள வைத்தமை.

15.தமது வலுத்திறனுக்கு மிஞ்சிய பாரத்தை ஈழத்தமிழர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணராதவாறு தமிழகத்திலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு தமிழ்ப்பற்றாளர்கள் என்ற போர்வையில் ஊடகங்கள், கட்சிகள் சார்ந்த தமிழர்கள் பலரை புலம்பெயர் நாடுகளுக்கு செல்ல வைத்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் வென்றே தீரும் என்று புளகாங்கித பூரிப்பான வார்த்தைகளை சொல்ல வைத்தமை.

16.தமிழகத்திலிருக்கும் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் அரசியல்வாதிகளை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சார்பாக கூட்டங்களில் பேச வைத்தமையும், பேச வைத்தன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழர்களை தமிழ்நாடு அரசின் உதவி தனிநாட்டுக்கு கிடைக்கும் என்ற நப்பாசை கொள்ள வைத்தமை.

17.புலம்பெயர் தமிழர்களிலிருந்து கணிசமான தொகையினர் ஆயுதப் போராட்டத்திற்கான அரசியல் ரீதியான ஆதரவினையும் பிரசாரத்தினையும் நிதிப் பங்களிப்பினையும் செய்ய வைத்தமை.

18.புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களின் பலமான வலைப்பின்னலை உருவாக்க பக்கபலமாக இருந்தமையை வைத்து இலங்கை அரசின் இராணுவ விஸ்தரிப்பை தமிழ் நிலங்களில் ஏற்படுத்தியமை.

19.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மரணத்தைத் தழுவும் உபாயத்தை ஏற்படுத்தியதுடன், தமிழரின் சொத்துக்களான வீடுகளும் அதுசார்ந்த சொத்துக்களும் அழிந்ததுடன், அவர்கள் வாழ்ந்த நிலங்களும் இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளாக்க வழிவகுத்தமை.

20.இலங்கைத் தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவானது தமிழருக்கான உரிமையை வென்றெடுப்பதற்கானதல்ல,தமிழரைப் பகடைக்காய்களாக்கி இலங்கையைக் கையாளவதற்கே என்பதை தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய முப்படைகளின் ஒத்துழைப்பு வழங்கிமை.

21.வடக்கு கிழக்கை இணைத்துக் கொடுத்து பின் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சொல்ல வைத்தமையும் தனிநாடுதான் என்ற தீவிரப் போக்கை ஏற்படுத்த வைத்தமை.

22.இலங்கை அரசுடன் சனநாயக இராஜதந்திர வழிகளில் அணுகி தமிழரின் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிச் செல்லும் அரசியல் அணுகுமுறைப் பாதையில் தடைகiளாக புலம்பெயர் நாடுகளில் இன்னும் தனிநாட்டுக் கொள்கைக்கான செயல்பாடு இருப்பதாக காட்டி இலங்கை அரசை தொடர்ச்சியாக தமிழர் நிலங்களில் இராணுவ மயப்படுத்தலை தொடர்வதற்கான தந்திரத்தை நடைமுறைப்படுத்தல்.இங்குள்ள சிலரை தமது ஒற்றர்களாக பயன்படுத்திக் கொண்டிருப்பது.

இவ்வாறாக இந்திய தேசம் தனது உளவு நிறுவனத்தைக் கொண்டு இலங்கையில் வாழும் அனைத்து இனமக்களையும் ஒற்றுமைப்படாமல் தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தி வருவதுடன்;,இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைக்கும் அவர்களே காரணமென்பதை அடுத்துவரும் தொடரில் தொடரும்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *